எந்தன் மனதில் நானே நாளும் நாளும் கனவை
ஒன்றாக வரைந்தேன் (நன்றாக வரைந்தேன்)
எந்தன் கனவில் கண்ட உலகை நானும்
தானே நன்றாக வரைந்தேன்
(நன்றாக வரைந்தேன்)
வானுலகை கடந்து காலத்தையும் கடந்து
நான் தூரதேசம்தான் செல்வேன்
மனந்தான் போன போக்கில் நானும்
இஷ்டம் போல் நான் செல்ல வேண்டுமே
(இஷ்டம் போல செல்ல வேண்டுமே)
வளர்ந்தால் அனைத்தும் மறந்திடுமே
நானோ இதனை மறவேனே
வளர்ந்தால் அனைத்தும் மறைந்திடுமே
நானோ இதனை மறவேனே
ஷால்லாலா...
பாட்டு பாடுவோமே
கைகள் கோர்த்து ஒன்றாய் ஆடுவோம்
டோரேமானோ கனவில் கண்டதெல்லாம்
ஒன்றாய் நாமோ உடனே
நினைவாக்கிடுவோமே
ஷால்லாலா...
பாட்டு பாடுவோமே
கைகள் கோர்த்து ஒன்றாய் ஆடுவோம்
டோரேமானோ கனவில் கண்டதெல்லாம்
ஒன்றாய் நாமோ உடனே
நினைவாக்கிடுவோமே