நான் உன்னையறிந்து கொண்டேன்
நீ மாமனிதனை நேரில் காண்கிறாய்
உணர்ந்து கொள்ள மறந்தாய்
(அதை இரசிக்கிறேன்)
மாற மனமில்லாத மனிதர் காண்கிறேன்
ஏற்றுக்கொள்வாய் உண்மையை
நேரில் காண்கிறாய்
(நான் மௌயி பாத்துக்கோ!)
அதிசயம் என் உருவமே
இது ஆச்சரியத்தைத் தருமே!
என்ன சொல்ல நீயும் வருக!
கடல் மீது வாழவே...
தயக்கம் என்ன நீயும் வருக!
நான் உன் நண்பன் என்பதை உணர்க!
(ஹே!)
கட்டை விரலால் வானத்தைத் தூக்கினேன்
நீ குழந்தையாக இருந்தபோது...
(நான் தான்!)
குளிரும் இரவில் தான் தீயைத் தந்தேனே...
காப்பாற்றவே!
(நம்ப முடியலையா? ஹோ!)
சூரியனைக் கட்டியிழுத்தேன்...
(நான் தான்!)
பகல் பொழுதைப் பெரிதாக்க!
கட்டி வந்தேன் காற்றையே...
(வருக!)
கடல் பயணம் நீயும் செய்யவே!
வேறென்ன சொல்ல? நீயும் வருக!
நானும் கண்டெடுக்கும் தீவினுக்கே!
தடையுமில்லை உனக்கே, வருக!
இது என்தன் மனது போட்ட கணக்கே!
வருக! வருக!
கற்றுக்கொள்ள வருக!
நான் உனக்கு சொல்லிக் கொடுப்பேனே
இயற்கை அர்த்தங்கள் கற்றுத்தருவேனே
அலை, புற்கள், நிலம்
நானிங்கு ஆடிய இடங்களே
மீனைக் கொன்றேன்
மண்ணில் புதைத்தேன்
தென்னை நட்டு இளநீர் தந்தேன்
கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன?
என்னுடன் மோதிட யாராலும் முடியாதே!
என்தன் உடலின் ஓவியங்கள்
என்தன் வெற்றியின் சின்னங்களே!
என்னாலே சாதிக்க முடியாததில்லை!
ஆனந்தமாய் குட்டி மௌயியின் தாளங்கள் தட்டு!
(ஹா! ஹா! ... ஹே!)
உன்னை இன்று அழைத்தேன் வருக!
மயக்கும் என் உலகிற்கே!
தடையுமில்லை உனக்கே, வருக!
நீ பாடம் கற்றுக்கொள்ள வருக!
நீ வந்ததிங்கு நல்ல நேரமே!
படகு எனக்கு வேண்டுமே!
பயணம் செய்ய படகைத் தருக!
நான் யார் என்பதை உணர்க!
(வருக! வருக! வருக! வருக!)
(ரொம்ப நன்றி!!!)