வேண்டாமே அந்த ப்ரூனோ நோ நோ நோ
வேண்டாமே அந்த ப்ரூனோ
ஆனால், அன்றெங்கள் மணநாளே (அன்றெங்கள் மணநாளே)
எல்லாரும் ரெடி அந்த வானில் ஓர் மேகம் இல்லை
(வானில் ஓர் மேகம் இல்லை)
ப்ரூனோ வந்தான் ஏனோ சிரிச்சி நின்றான் (மின்னல்)
நீயே சொல்லிக்கோ நானு கிளம்புரன்
(ஐ அம் சாரி மா, நீயே சொல்லு)
மழவரும்னு சொல்லிவச்சான்
(ஏன் அவன் சொன்னானோ?)
அவன் என்ன நல்லா பொலம்பவச்சான்
(அபுயெல்லா, தாங்க அம்ப்ரெல்லா)
சூறாவளியில் சிக்க வச்சான்
(அன்று ஒரு சுபநாள் ஆனாலும்)
வேண்டாமே அந்த ப்ரூனோ நோ நோ நோ
வேண்டாமே அந்த ப்ரூனோ...
ப்ரூனோ பத்தி பேசினாலே பிரச்சினைகள் வருமே
அடிக்கடி எனக்கு அவன் குரல் கேட்கும் தினமே
மணல் துகள் விழுகிற சத்தம் கேட்குதம்மா
பித்து ஏறி புத்தி மாறி போயிட்டாரே அவரு
பாட்டி கிட்ட பேசுவதை விட்டுட்டாரே அவரு
புரியாத புதிராய் மாறிப்போனாரு
உனக்கது புரிகிறதா?
ஏழடி ஆளு எலிங்க கூட பார்
அவன் பெயர் சொன்னால் வாழ்வழியும் பார்
உன் கனவறிவான் உன் பயத்தில் மகிழ்வான்
வேண்டாமே அந்த ப்ரூனோ நோ நோ நோ (ஓ...நோ)
வேண்டாமே அந்த ப்ரூனோ
என் மீன் அது இறக்கும் என்றான், செத்துப் போச்சே (நோ நோ)
தொந்தி ரொம்ப போடுன்னா, சொன்ன மாதிரியே ஆச்சே (நோ நோ)
என் தலை சொட்டை ஆகும் என்று சொன்னான், ஆகிப்போச்சே (நோ நோ)
அவன் ஒரு முறை சொன்னால் நடக்குமே...
உன் கனவுகள் கைகூடும் நாள் வருமென்றென அவர் உரைத்தார்
திராட்சை கொடிபோல் என் திறன்கள் வளரும் என்று அவர் உரைத்தார்
(இங்கே மரியானோ வருகின்றான்)
என் கனவு மன்னவன் வேறிடம் சேருவான் என்றாரே
அது நடக்கிறதே, அவர் குரல் கேட்கிறதா?
(ஹே சிஸ், பாரு இனி பேசாதே)
அவர் குரல் கேட்கின்றேன், நான் கேட்கின்றேன்
அம்... ப்ரூனோ
யா, அதே ப்ரூனோ
நான் அரிஞ்சிக்க ஆசப்படும் ப்ரூனோ
உண்மைய சொல்லுங்க, யார் அந்த ப்ரூனோ?
இசபெல்லா, மாப்பிள்ளை பார்
(உணவுண்ணும் நேரம்)
உன் கனவுகள்...அன்றெங்கள் மணநாளே...எலிங்க கூட பார்
வானில் ஓர் மேகம் இல்லை...
அவன் பெயர் சொன்னால்...அவர் உரைத்தார்
(திராட்சை கொடிபோல்...)
ப்ரூனோ வந்தான் ஏனோ சிரிச்சி நின்றான் (மின்னல்)
நீயே சொல்லிக்கோ நானு கிளம்புரன்
இங்கே மரியானோ வருகின்றான்
மழவரும்னு சொல்லிவச்சான் (ஏன் அவன் சொன்னானோ?)
வளரும் என்று அவர் உரைத்தார்...
(அவன் என்ன நல்லா பொலம்பவச்சான்)
அபுயெல்லா, தாங்க அம்ப்ரெல்லா
அந்த நாள், அந்த நாள், அந்த நாள்...
(சூறாவளியில் சிக்க வச்சான்)...வருமோ?
வந்தாச்சு... வேண்டாமே அந்த ப்ரூனோ...
ஏன் அவன் பேச்செடுத்தேனோ?
(தேவையில்லையே ப்ரூனோ)
அவன் பற்றிய பேச்சு இனி நோ நோ