கவலைகள் வேண்டாமே
ஓ... சோகமும் வேண்டாமே
ஹே, குடும்பத்தில் நானோர் அங்கமே
என்றாலும் ஒரு சோகமும் இல்லை
உந்தன் வெற்றியில் துணையாய் இருப்பேன்
தவிக்கின்றேன்... தவிக்கின்றேன்
இயலாதென்னால் தாக்க
இயலாதென்னால் பூக்க செய்ய
இயலாதென்னால் இன்னும் காத்திருக்கவே
வேண்டும் எந்தன் வரமே...
இயலாதென்னால் பார்க்க
புயல்மழை அடக்க அறியேன்
இந்த அடியேன்
இயலாதென்னால் வலிகள் தடை மறைக்கத்தானே
என்றும் வேண்டும் எந்தன் வரமே
எந்தன் வரமே
ஏனோ தனியாய் சென்றே...
எதையோ தேடி அலைந்தேன்
நானும் கதவின் முன்னே காத்திருந்தேனே
உன்னை போல் மாறவே
வேண்டும் மாற்றம் ஒன்றே
வேண்டும் வாய்ப்பு ஒன்றே
தனியாய் நானும் இங்கே நிற்கின்றேனே,
கண்கள் திறவாய்?
கண்கள் திறவாய்?
கண்கள் திறவாய்?
மலைகளை நகர்த்திட வேண்டும்
மலர்களை பூக்கவைக்க வேண்டும் நான்
சொல்வீரோ அட என்னவானாலும் செய்வேனோ
என்றும் வேண்டும் எந்தன் வரமே
எந்தன் வரமே
எதையும் சரிசெய்ய வேண்டும்
புதிதாய் ஒன்றை காட்டிடனும்
யாரென்றே காட்ட என்ன செய்திடவேண்டும்?
இன்னும் காக்கவேண்டுமோ?
அது தகுமோ?
ஆனால் என்ன?
ஏதுவானால் என்ன?
பொறுத்தது போதும்
ஒரு கைப்பார்ப்போம் இனி
பார்த்திட வா நீ என்னை
இனி வாழ்நாள் முழுதும்
என் கைவருமோ வரமே...?
தாமதமோ எந்தன் வரமே?