ஆர்மடில்லோ:
இது தான் முதல் இடம்
பல்லூ:
புரிஞ்சுது, இதான் முதல் இடம்
ஸ்குரில்:
புரிஞ்சுது, அது தான் முதல் இடம்
மௌக்லி:
புரிஞ்சுது, முடிஞ்சுது, இப்ப அவங்கள ரெண்டாவது இடத்துக்கு போக சொல்லு
ஸ்குரில்:
புரிஞ்சுது, ரெண்டாவது எடத்துக்கு போ
பல்லூ:
புரிஞ்சுது
பல்லூ & மௌக்லி:
தேடல்கள் நம் தேவைகள்
நமதன்றாட தேவைகள்
கவலை கஷ்டங்கள் யாவும் மறந்தே
எந்நாளும் நம் தேவைகள்
இயற்கை நம்மிடம் சேர்க்குமே
அதுவே நம் தேவைகளை தீர்க்குமே
எங்கெங்களைந்தாலும் எங்கு சுற்றினும்
வீட்டின் மீதன்பு பெருகிடவேண்டும்
ரீங்கார வண்டு மரத்திலே எனக்கு தேனை சேர்க்குமே
பாறை, செடிகளுக்கடியில் பார்த்திடும்போது
கூட்டமாய் எறும்புகள் இன்னும் முயன்றே பார்க்கலாம்
மௌக்லி:
நம் வாழ்வின் தேவைகள்
எல்லாம் கைகூடுமே
பல்லூ:
எங்கெங்களைந்தாலும் எங்கு சுற்றினும்
வீட்டின் மீதன்பு பெருகிடவேண்டும்
ரீங்கார வண்டு மரத்திலே எனக்காக தேனை சேர்க்குமே
பாறை, செடிகளுக்கடியில் நீ பார்த்திடும்போது
கூட்டமாய் எறும்புகள் இன்னும் முயலலாம்
நம் வாழ்வின் தேவைகள்
எல்லாம் கைகூடுமே
எல்லாம் கைகூடும்
உனக்கெல்லாம் கைகூடும்
கூடிடும்
மௌக்லி:
பல்லூ பல்லூ பல்லூ அங்க பாரு