பாயும் புலி தான், யானை பலம் தான்
பூமிபோலே தாங்கிக்கொள்வேன் நான்
மலை உதிரும், மனை அதிரும்
எந்தன் பலமென நான் அதை அறிவேன்
இயலாதென சொல்லமாட்டேன்
நொடியில் செய்து முடித்திடுவேன் நான்
எரிமலை எதிர்வந்து எதிர்த்துதான் நின்றாலும்
அதினின்று நானதை செய்துதான் முடிப்பேனே!
உள்ளத்தின் உள்ளே எப்பவும் நடுக்கம்
கயற்றினில் மேல் நடந்திடும் dangerous circus
உள்ளத்தின் உள்ளே மாவீரனேயானாலும்
ஓடி ஒலியவைக்கும் செர்பரஸ்
உள்ளத்தின் உள்ளே யாருக்கும் பயனின்றி
ஆவேனோ நான் useless?
இந்த யானைக்கும் அடி சருக்குமோ?
ஒரு பூகம்பம்தான் விழுங்குமோ என்னை?
அழுத்தந்தான் grip grip grip
என்னை விடாதோ? ஓ
அழுத்தம்தான் டிக் டிக் டிக்
இடும் time bomb-ஒ? ஓ ஓ ஒ
அவகிட்ட விடுங்க பலசாலி
அவளுக்கென்ன அவ தைரியசாலி
விட்டுவிட்டா என்ன கதியாகும்?
விடுவேனோ?
அழுத்தந்தான் grip grip grip
அது நிற்காதோ? ஓ
அழுத்தம்தான் டிக் டிக் டிக்
இடும் time bomb-ஒ? ஓ ஓ ஒ
அவகிட்ட விடுங்க பலசாலி
சிகரத்தை தாங்கிடும் சக்திசாலி
விட்டுவிட்டா என்ன கதியாகும்?
விடுவேனோ?
உள்ளத்தின் உள்ளே எனக்குமே சில
நடுக்கங்கள் இருந்தாலும் துணிவேன் நான்
உள்ளத்தின் உள்ளே தடைகள் வந்தாலும்
alert-ஆக தானே நானும் இருப்பேனே
உள்ளத்தின் உள்ளே வாழ்விதன் பயணனென்ன?
யாரிடம் நான் கேட்க?
தடைகள் வரட்டும், தகர்க்க தெரியும்
சூறாவளி சுழலும் சுத்தி சுத்தி சுத்தி—
ஆனால் வரும் ஒர் நாள்,
விடைபெறுவேனோ?
எதிர்பார்ப்பு இல்லா தனிமை
கண்டு ரசிப்பேனோ?
சொல் என் மனமே நீ,
நிம்மதி எங்கே?
நாம் அறியோமே ...
ஆனாலும் அழுத்தம்
[pressure, pressure, pressure, pressure... ]
கூடிப்போகும்... கூடிப்போகும்...
அதை நானும் அறிவேன்
அழுத்தந்தான் grip grip grip
அது நிற்காதோ? ஓ
அழுத்தம்தான் டிக் டிக் டிக்
இடும் time bomb-ஒ? ஓ ஓ ஒ
அவகிட்ட விடுங்க கவலையின்றி
அவதானே குடும்பத்தின் சுமைதாங்கி
பாரம் ஏறி சுமைக்கூடி போனாலும் ...
விடமாட்டேன்!
அழுத்தந்தான் grip grip grip
என்னை விடாதோ? ஓ
அழுத்தம்தான் டிக் டிக் டிக்
இடும் time bomb-ஒ? ஓ ஓ ஒ
என்கிட்டே விடுங்க பாத்துப்பேனே
உங்களோட பிரச்னையும் போக்குவேனே
எது வந்தாலும் ஒரு கைப்பார்ப்பேனே
விட ... மாட்டேன் ... நான்!
ஒரு கைப்பார்ப்பேன்!