எதுவும் நினைப்பது போல் நிகழ்வதில்லை
தினமும் போராட்டம்
உள்ளுக்குள் இருப்பதெல்லாம் பாரம் தான்
உண்மையை மூடி மறைத்தே நான் வாழ்கிறேன்
என்னவென்று நானும் சொல்ல?
என் பெண்மையோ எனையே கேள்வி தான் கேட்கிறதே
விடை தெரியாமல் நாட்களுமே யுகமென்றானதே
ஒரு நாள்
நான் யார் என்று உலகம் அறியும்
உண்மை அது புரியும்
மனதின் என் எண்ணமெல்லாம் நிறைவேறிடுமே
எனக்கதுவே போதும்
என் பெண்மையோ எனையே கேள்வி தான் கேட்கிறதே
இனம் புரியாமல் எந்தன் பிம்பமோ வாடுதே
நாளும் என் ஏக்கங்கள் என் நெஞ்சை வதைக்கிறதே
காலம் தான் பதிலை சொல்லும் இதற்கு தீர்வை
எனக்கும் சிறகை விரிக்க ஆசை தான்
ஆனால் எந்தன் தோளில் சுமை இறங்க மறுக்குதே
என் எண்ண ஓட்டங்கள் சொல்லிடவும் முடியாமல்
உள்ளுக்குள்ளே வைத்து நான் என்னாவேனோ?
வாடி நின்றால் எதுவும் வராது, நான் அறிவேன்
என்று என் பிம்பம் வருமோ
அதில் நான் தெரிவேன்?
என்று என் பிம்பம் வருமோ
அதில் நான் தெரிவேன்?