பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
இலவச வெயில் வந்து விழுமே
என்னை இதமாய் தொடுமே
பூங்காத்தையே
வனம் வடிக்கட்டி அனுப்பிடுமே
மழை மழை மழை துளி விழுமே
என் மர்மம் தொடுமே
தலை ஈரத்தை
ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே
ஓடை எங்கள் தாய்ப்பால்
இந்த ஊரும் மண்ணும் தாய்மடி
இங்கே இல்லை நோய் நொடி
இந்த இடம் நல்ல இடம்
இது எந்தன் தலை நகரம்
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
சொத்து சுகம் தேடுகிற மனசா
இந்த சொகமே வருமா ?
பணம் காசெல்லாம்
இந்த பனி துளி விலை பெருமா?
வெட்டவெளி பொழப்புக்கு தானே
மனம் ஏங்கி கிடக்கு
ஆகாயமே
இங்க அக்கம் பக்கம் வந்து கிடக்கு
பட்டாம்பூச்சி பிடிக்க
நாம் பதுங்கி மெல்ல போகலாம்
அது பறக்கும் போது தோற்க்கலாம்
மனிதரை மறந்தொரு
பறவையின் வரம் பெறலாம்
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு