தட்டினால் திறக்கும் என் உலகம் எனக்காய்
கிடைத்தால் அது எனது
கிடைக்காததை நான் திருடிடும்போது, இந்த உலகெனது
குதிப்பேன், படைகளை தாண்டி
நீயோ சிரிப்பது ஏண்டி?
நானோ, எதுவுமில்லா ஆண்டி
தேடாய், தெரு நாய், நில்லாய்!
வேணா, நானா மாட்டுவேனா ?
கேட்கபார்பான், பின்னால் பாராய்.
தடைவிதித்தால், அடைத்துவைத்தால்,
இங்கு எதிர்வழி தனிவழியே.
ஓஹோ, இங்கு அலாதின் விழுந்தானா?
(ஓ இல்ல)
குற்றங்களின் மன்னன் நீ தானா?
அம்மா, அப்பா என்று இல்லை யாரும்.
வயிற்றுக்கு தான் திருடுகிறேன்
அதை சொல்ல எனக்கு இல்லை நேரம்.
குதிப்பேன், நான் மலையின்மேலே
குதித்தால் நிலமதிரும்
எனக்காய் புதுவழி உருவாகும்.
குதிப்பேன். அத்தடியர்கள் மேலே
அதிலே நீர் தடைபோட்டால்
தடையே என் படியென ஆகுமே
திருடா! பீடா! அபூ! ஊரடா!
வேகம் வேகம் ஏனோ?
அலாதினோ எந்தன் தேனோ?
வயிற்றுக்கு தான் திருடுகிறேன்,
இல்லையேல் இது நல்ல நாள். (வாள்)
குதிப்பேன், அக்குதிரை மேலே
கோட்டை அம்மதிலிலே
பறப்பேன் பேரழிவின் மேலே
வீசும் அப்புயல் போலே
ஆனால் சிறகுகள் இல்லை
ஏதும் தடை இல்லை
குதித்திட பிறந்தவன் நான்!