அற்புதம் தானே என் பாதம் நிலத்தில் பட
பல காலம் நான் நடக்காமல் வாழ்ந்திருந்தேன்
என் கண்களாலே நான் மீண்டும் கண்டேன்
கனவும் நனவாச்சு வெளிவந்தேன்
இனி நான் செய்யவே ஒரு செயல் உண்டு
அந்த தீயவளை இங்கிருந்து ஓட செய்வேன்
நான் இருளை இங்கு ஓட்டீ நல்ல ஒளியை தருவேன்
இந்த முறை நான் எதிர்த்தே வெல்லுவேன்
இது என் நேரமே
எதிரிகளை சந்தித்திடவே
நேரமே
நம் நாட்டை இனி மீட்டெடுக்கவே
இது என் நேரமே
நான் பெருமை ஓடு நடை போடவே
நேரமே
வென்றிடவே சாதித்திடுவேன்
நான் செல்ல வேண்டுமே அரண்மனைக்கு உடனே
அவலோரை நான் விடுதலை செய்திடுவேன்
என் வாழ்நாளில் இதற்காக காத்திருந்தேன்
இனி எந்த தடையுமில்லையே
இது என் நேரமே
திட்டங்கள் போற்றிடவே
நானெ
வெல்லும் வரை ஓய்ந்திடமாட்டேன்
நேரமே
என் முன்னோர்கள் பெருமை படவே
நேரமே
நல்ல வாய்ப்பிதே வந்ததே
நேரமே இன்றே வந்ததே