அன்றொரு நாள் பெத்லகேமில்
பிறந்த நம் வேந்தன்
மேரி மைந்தன் வானவன்
வரைந்த கிறிஸ்மஸ் நைட்
யூத மைந்தனை பாடுங்கள்
நம் நாதன் கிறிஸ்துவால்
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வந்துதித்தான் விண் பாலகன்
பிழைத்தோம் நாமெல்லாம்
கொண்டாட்டத்தின் கோலமாய்
கொடுத்தான் கிறிஸ்மஸ் நைட்
மாட்டுத் தொழுவம் ஒன்றிலே
விண்ணாளும் வேந்தனே
முன்னணையில் பூவைப் போலவே
இம்மண்ணில் மலர்ந்தாரே
யூத மைந்தனை பாடுங்கள்
நம் நாதன் கிறிஸ்துவால்
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
உலக மாந்தர் யாவருக்கும்
சந்தோஷம் தந்திடும்
மகிழ்வான செய்தி கூறிடும்
வசந்தம் கிறிஸ்மஸ் நைட்
விண்ணின் வேந்தன் பிள்ளையாய்
இம்மண்ணின் தாரகையாய்
எல்லோரின் நெஞ்சில் நேசமாய்
நாம் துதித்திட உதித்தாரே
இருளில் ஆழ்ந்த பூமியில்
உதித்த பொன் தெய்வம்
புதுவாழ்வு நல்கும் ஆற்றலாய்
எழுந்த கிறிஸ்மஸ் நைட்
யூத மைந்தனை பாடுங்கள்
நம் நாதன் கிறிஸ்துவால்
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே
வராது வந்த வாஞ்சையும்
நாம் வணங்கிட பிறந்தாரே