இந்த உலகிலே, இன்ப இரவிலே,
தனிமை வாழ்விலே சுகமும் இல்லையே
எந்தன் இதயமே என்னிடம் இல்லையே,
அது தொலைந்ததோ அன்பில் கறைந்ததோ
உனை எங்கே தேடுவேன் அன்பே,
நேசம் உண்மையென்றால் நேரில் நீ வருவாய்
அன்பே, என் அருகே நீ
இருந்தால் இரவும் பகலாய் மாறுமே
உன்னை காணத்தான் உள்ளம் துடிக்கிறதே,
என் உயிரும் துடிக்கிறதே
உனக்காகவே நான் வாழ்கிறேன்,
உண்மை காதலே என்றும் அழியாததே
இந்த உலகிலே இன்பம் தந்தவளே
எந்தன் இதயமே வந்ததே,
என் வாழ்விலே இனி இன்பமே
அன்பே, நேசம் உண்மையன்றோ,
நேரில் நீ வந்தாய்
அன்பே, என் அருகே நீயும்
இருந்தால் இரவும் பகலாய் மாறுமே
உன்னை காணத்தான் உள்ளம்
துடித்ததே, உயிரும் துடித்ததே
உண்மை காதல் ஒன்றானதே