செய்யும் வேலை சொதப்புவேன்,
சந்தேகம் உனக்கு என்மேல் இருக்கலாம்,
என்ன இருந்துமென்ன,
ஒரு முறை என்னை நம்பி பார்,
வெல்வேனே ஓர் வாய்ப்பு தந்தால்,
உன் எண்ணம் போலவே நான்,
உனக்கு பெருமை சேர்ப்பேன்,
திறமை முழுவதும் காட்டியே எந்தன் மீது நம்பிக்கை வைத்தால் நான் வென்றே தீருவேன்.
நீ கனவிலும் நினையா பகையில் நான் மாறி இருந்தாலே,
நீ நினைப்பாயே அவனா இவன் அல்ல,
இவனா அவன் என்று தான்.
எத்தனையோ தவறு செய்தேன்,
ஏமாற்றங்கள் உனக்கு தந்தேன்,
என்னால் ஆன மட்டும் நான் மோதிப்பார்த்தேன் என்னை நம்பு.
பொருத்து பார்,
உன் எண்ணம் போல் ஆகும்,
இதில் என் உயிர் போனாலும்,
உனக்கு பெருமை சேர்ப்பேன்,
உன்னை என்னையும் நம்ப வைப்பேன்.
அன்று போல நான் இப்போது இல்லையே,
அதை நீ உணர்வாய்.
என்றும் தீதுவேன்,
வாகை சூடி திரும்புவேன்,
தன்னோட மகன் பேற்ற வெற்றியை தாய் காணும் பெருமையை நான் காணுவேன்,
தன் மகனின் வெற்றியை தாய் காணும் பெருமையை காணுவேன்