உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ?
நீ இரவில் –
வருத்தத்தில் மூழ்கியிருக்கும்போது !
உன் கூந்தலைக் கோதி விடுபவர் யார்?
நீ என்னை அருகே கொள்ளாதபோது !
நீ அழும்போது-
யார் தோளில் நீ சாய்ந்துகொள்வாய் ?
நட்சத்திரம் இல்லாத இரவு வரும்போது-
அப்போது யார் உன்னிடம் மன்னிப்புக் கேட்பார்?
இலையுதிர் காலத்தில்-
இலைகள் உதிரும்போது-
யார் உட்கார்ந்துகொண்டு உனக்காகக் காத்திருப்பார் ?
உன் காலடியில் விழுந்து கிடக்கிற-
பழுத்த இலைகளை யார் அப்புறப்படுத்துவார் ?
நீண்ட பொழுதுடைய ’யால்டா’ இரவில்-
யார் காத்திருப்பார்?-
உன் முகத்தில் புன்முறுவல் வரும்வரை !
இரவு முடிந்து காலை மலரும் வரை !
மழையின் இசைக்கு ஏற்றவாறு –
உனக்கு யார் கதை சொல்வார்?
கடக்கும் சாலை நீளமாக இருக்கும்போது-
உனக்கு நல்ல காதல் பாட்டுப் பாடுவது யார் ?