கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு
அனைக்கின்ற நெருப்பு
நான் கொண்ட நெருப்பு
அனைக்கின்ற நெருப்பு
யார் அனைப்பாரோ
இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நான் ஒரு ராணி மங்கையில் ஞானி
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்
கோடையில் ஒரு நாள் மழை வரக் கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்