கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்...
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
உறவே பிரிவாகி வழிமாறும் போது
உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது
உறவே பிரிவாகி வழிமாறும் போது
உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது
நினைவிழந்தேன் எனைமறந்தேன் காதலினாலே
மதியிழந்து வழிமறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம்
காலம் பிரித்தாலும் மறையாத சோகம்
ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம்
காலம் பிரித்தாலும் மறையாத சோகம்
விதிஎழுதும் சதி இதுவோ யாரறிவாரே
விழி இருந்தும் பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்