நான் தாவும் இனத்தின் மன்னனே
இந்த காட்டின் வி.ஐ.பி
என் எண்ணமெல்லாம் ஈடேறியது
மனம் ஆனந்தம் பாடுது
மனிதனாய் மாறி நானே
ஊருக்குள் சென்றேனே
நான் நானாக இருப்பதை மறந்தே
மனிதனாய் மாறுவேன்
ஓ, உபி டூ
என் மனம் ஏங்குது உ உ
உன்னை போல் நான் நடக்க நான் பேச வேண்டூ உ உ உம்
நீ நிஜம் காணு உ உ உ
எனை போலே ஏ ஏ ஏ
கற்றுக்கொள்வேனே வாழனும் உன்னை போ ஓ ஓ ஓல்
என ஏய்க்க பாக்காத பாலக
உன்னோடு ஒரு ஒப்பந்தோன்
என் மனதின் ஆசை அது தீயின் வேட்கை
என் கனவு நெனவாகும்
அந்த ரகசியம் சொல் குட்டி மனித (சொல்லு)
என்ன செய்வது
ரத்த புஷ்பத்தின் வலிமையை தா
நான் உன்னை போல் ஆகிடுவேன்
ஓ, ஓபி டூ
என் மனம் ஏங்குது உ உ
உன்னை போல் நான் நடக்க நான் பேச வேண்டூ உ உ உம்
நீ நிஜம் காணு உ உ உ
எனை போலே ஏ ஏ ஏ
கற்றுக்கொள்வேனே வாழனும் உன்னை போ ஓ ஓ ஓல்
இது விந்தை என நீ எண்ணுவாய்
என்னை போல் பிரம்மாண்ட மானது
ஒன்று சேரும் கனா காணும்
நேரம் இது குட்டி மனித
நாம் இணையலாம் வலிமை கூடும்
நமதாகுமே பொக்கிஷ காடும்
பேராசை எனது போராட்டம் உனது
நாம் இனைய எங்கும் மனது
கனவு உ உ
உன்னை போல் ஆவது உ உ
எனக்கு திறன் வேண்டும்
உன் கரம் வேண்டும்
நீ வர வேண்டும்
ஓ என்ன அற்புதமான காட்சி இதே
என்னை போல் பிரம்மாண்டமானது
அந்த மனிதரை போல் கற்றுக்கொள்வது உ உ
நான் மனிதனாய் வாழ்ந்திட கற்றேனே
நான் மனிதனாய் வாழ்ந்திட கற்றேனே