current location : Lyricf.com
/
Songs
/
İhtiyacı var [Tamil translation]
İhtiyacı var [Tamil translation]
turnover time:2024-12-22 01:15:54
İhtiyacı var [Tamil translation]

இறப்பதற்கு அஞ்சவில்லை!

நீயில்லாமல் வாழவே அஞ்சுகிறேன்!

நீயில்லாது-

ஒவ்வொரு புது நாளையும் என்னால் சந்திக்க முடியவில்லை!

நான் –

ஒவ்வொரு கணமும்-

உன்னோடே இருக்க விரும்புகிறேன்!

நீயில்லாத அந்த வெறுமை-

என்னால் தாங்கமுடியாததாக உள்ளது !

எனது இந்தக் காதலுக்குத் தீர்வு-

உன்னோடு சேர்ந்து சாவதுதான் !

எவ்வித அச்சமும் இல்லாது-

உன்னோடு நான் சாவேன்!

வாழ்வு , சாவு – இரண்டுமே உன்னோடுதான் !

உன்னோடு சேர்ந்துதான் நான் –

இந்த உலகத்தை நேசிக்கவேண்டும் !

எனது ஆன்மா-

அதற்கு உன் அன்பு கட்டாயமாகிறது !

என் இளமை வாழ்வு!

என் ஏங்கும் நெஞ்சம்!

என் நாள் ஒவ்வொன்றும்!-

எல்லாமே உன் காதலில்லாமல் நடக்காது !

எனது இதயத்தைக் குண்டு துளைத்தாலும்-

அதில் இரத்தம் வராது!

என் இதயம் முழுதும் உன் ஆசையே நிரம்பியுள்ளதால்!

என் உடல் அழுகிப்போகாது!-

என் உடல் முழுதும் உன் என்ணமே நிரம்பியுள்ளதால் !

என் கல்லறையில் பூவாக நீ முளைத்திருப்பாயாதலால்-

நான் தேனீக்களுக்குத் தேன் தருவேன் !

நான் சாவதற்கு அஞ்சவில்லை!

நான் உன்னோடு இறப்பதுதா என் காதலுக்கு வழி என்றால்-

அதற்கு அஞ்சேன் !

நான் உன்னோடு சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் !

உன்னோடு சேர்ந்து சாகவே ஆசைப்படுகிறேன்!

வாழ்வின் பொருளையே உன்னோடு சேர்ந்துதான் காணப்போகிறேன் !

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Alişan
  • country:Turkey
  • Languages:Turkish, Kurdish (Kurmanji)
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Serkan_Tekta%C5%9F
Alişan
Latest update
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved