ஏதோ நடக்குதங்கே
என்ன?
அவங்க மனசுக்குள்ளே கண்ணை மறைக்கும் காதல் வந்துருச்சு. மூவர், இனி நாம் இருவர். மாலையின் கோலங்கள், மாய மந்திர ஜாலங்கள்; நம்மை சூழ்ந்திடும் உல்லாச வேளையில் பூகம்பம் வருதே
Chorus
காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம்; கண் பார்வைகள் சங்கீதம் பாடி கொஞ்சாமல் கொஞ்சுமே
என் மனதையே உருத்தும் அந்நாளைய கதை, சொன்னால் அவள் நெஞ்சம், அம்மம்மா, என்னை துறந்திடும்
சொந்தங்களை பிரிந்தே மறைந்திருப்பதேன்? என் ராஜனே, உன் உரிமை கோரவே தயங்குவதேனோ நீ?
காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம்; கண் பார்வைகள் சங்கீதம் பாடி கொஞ்சாமல் கொஞ்சுமே
காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம்; மௌனமாய் நெஞ்சங்கள் இனைய வாழ்த்தும் காதலே
Timon: காதல் அவன் கொண்டால் இனி பிரிவே என்போம்.
Pumbaa: நம் நேசத்தை மறந்தே போவான்
Both: நாம் சேர்ந்தா இப்போ, அம்போ