அறிவு இல்லா ஜென்மங்களே,
அடடா முட்டாள் கூட்டமே!
நான் சொல்வதையே கேளுங்க.
இந்த சிங்கத்தின் ஆணை!
நீ பார்க்கிற பார்வையை பார்த்தா,
உன் மண்டையில் மண்ணும் இல்லை.
நான் ராஜாங்க வாரிசை சொல்றேன்;
முழு மூடனுக்கும் புரியும்!
வாழ்விலே வருமே ஒரு வாய்ப்பு!
அட்டகாசமாய் சொல்வேன் செய்தி.
புரட்சியினாலே, அரசே மாறும்!
"எங்களுக்கு என்ன மிச்சம்?"
"நான் சொல்றேன் சொச்சம்"
நான் சொன்னபடி பாட்ட பாடினாதான் வேட்டை;
போடுங்க உங்க வோட்டை!
அப்ப ஆள்வேன் நான் இந்த காட்டை!
தயாராவோம்!
இணையே இல்லா மன்னனோடு,
இணைந்திடும் காலமிதே.
எல்லாரும் என் கண்மணி போல,
எப்போதுமே சேவை செஞ்சா,
அள்ளி அள்ளி தருவேன் பரிசு.
மன்னாதி மன்னன் நான்தானே!
என் தயவு இல்லனா நீங்க,
வெறும் பட்டினி பட்டாளமே!
எழுவோம்! எழுவோம்! இனி நாமே.
துணிவோம்! துணிவோம்! வெல்வோமே!
நெருப்பையே கொட்டும், (எங்களுக்கும்)
பயங்கர கூட்டம்! (நிறைய உணவும்)
அதிர்ச்சிதரும் சூழ்ச்சி ஆரம்பமே. (என்றுமிங்கே கவலையில்லை)
என் தேவைகள் நிறைவேற, வாழ்ந்திட, வணங்கிட,
மாமன்னன் நானாகுவேன்!
என் ஆசை பசி தீர்க்கவே,
தயாராவோம்!
நம் ஆசை பசி தீர்க்கவே,
தயாராவோம்!