உந்தன் கற்பனையில்
சுடு பாலையின் மேல்
ஒரு ஒட்டகத்தில் போகின்றோம்
இது யார் நிலமோ
எவர் ஆள்கிறரோ
என்னானாலுமே வா செல்வோம்
தென்றல் கிழக்கிருந்து
வெய்யில் மேற்கிருந்து
அந்த மண் அங்கு மின்னிடும் பார்
நாம் அங்கே போவோமா….
மாயக் கம்பளி மேல்
அரேபிய இரவினிலே…..
அந்தத் தெருக்களிலே
நாமும் பறக்கையிலே
நம் வாசத்தில் ஏலக்காய்
மணம் வீசும் கடை
பணம் பேசும் உடை
இந்தப் பட்டுடை யாருக்காய்…..
மனம் அள்ளும் இசை
புரியாது திசை
மதி மயக்கும் நிலாவினிலே….
எது உண்மை இங்கே
எது கனவு இங்கே
அரேபிய இரவினிலே
அரேபிய யாமம்
பகல் போலத் தோன்றும்
ஓ எப்போதுமே
ஓ சூடாகவே
ஓர் வாழ்க்கை இங்கே
அரேபிய யாமம்
கனவைப் போல தோன்றும்
விண்ணில் மண்ணிலே
உன்னில் என்னிலே
மாயம் கண்ணிலே…..
இந்தப் பாதை இங்கே
நன்மை பேராசை என்று
ரெண்டாகி போகும் போதிலே…
இருள் யாவும் நீக்க
முடிவென்ன பார்க்க
உந்தன் வாழ்க்கை உந்தன் கையிலே
அரேபிய யாமம்
பகலை போல தோன்றும்
இச்சைகள் தரும்
அச்சங்கள் தரும்
உன்னை திண்ணுமே
அராபிய யாமம்
நிலவின் பாலிலே
ஒட்டகத்திமில் நம் கட்டிக்கொண்டு
மண் மேல் செல்கிறோம்