current location : Lyricf.com
/
Songs
/
நீயே தான் [All of You] [Neeye Thaan] lyrics
நீயே தான் [All of You] [Neeye Thaan] lyrics
turnover time:2024-12-28 15:18:52
நீயே தான் [All of You] [Neeye Thaan] lyrics

வீடுதன்னையே புதுப்பிக்க நாம் வேண்டும்

கடினம் ஆனாலும் சேர்ந்து செய்வோமே

குடும்பத்தை பாரு, ஒரு நட்சத்திர கூட்டம்

ஒளிர்ந்திடவே இங்கெல்லாருக்கும் ஆசைதான்

ஆனால் திறமை என்பதோ

அது மறைந்து போகுமோ?

இதையும் அறிவாய் நீ

எந்த வரமும் தேவையில்லை

உன்னை இழக்காதிருக்கவே நான்

கொஞ்சம் கடுமைதான் காண்பித்தேனே

ஓர் அற்புதம் என்றால் மேஜிக் மட்டும் இல்லை

அற்புதம் நீதான், நான் சொல்வேன் நீயேதான்

அற்புதம் என்றால், நீயேதான் (நீயேதான்)

ok, இனி நாம ப்ரூனோ பத்தி பேசலாம்?

ஆமா பேசலாம்

யாஹ், நான்தான் அந்த அன்பு ப்ரூனோ

நா சொல்றன், ok பெப்பா

சாரி, உன் கல்யாணத்துக்கு டென்ஷன் குரைக்க

நா பாக்கவே முடில, கொஞ்சம் சொதப்பிவிட்டேன்

ஆனா ஒன்ன தெரிஞ்சிக்கோ, என் அன்ப புரிஞ்சிக்கோ

வெயிலோ, மழையோ, புயலோ, இடியோ விடுப்பா

(அதைத்தானே நானும் சொல்றன் ப்ரோ)

நிறையா பேருக்கு இன்னும் சாரி சொல்லணுமே

ஹே, பழங்கதையெல்லாம் இப்ப எதுக்கு?

(அதிப்போ தேவையில்ல) பக்கத்துல வா

அட போனதுபோகட்டும், காண்போம் புதுவழியே

அவரெங்கும் செல்லவில்லை, கேட்டேன் அவர் குரலை.

சத்தம் என்ன? [நம்ம ஊர்ல இருக்குற எல்லாருமே வந்துருக்காங்க]

ஹே, கவலை வேண்டாம், கவலை வேண்டாம்

இனி கவலை இல்லை (கவலை இல்லை)

இனி ஓர் வரங்கள் இல்லை, கரங்கள் உண்டு

உதவி செய்ய நாங்கள் உண்டு

கனவு மெய்ப்பட ஒன்றாய் சேர்ந்துழைப்போம்

சிலநேரம் அழுகின்றேன் (நானும் தான்)

பலம் வேண்டாம் அறிவு தான் போதும் எனக்கு

வெளிச்சமும், உரமும் போதும் எனக்கு

come on, இந்த விதைகளை ஒன்றாய் விதைப்போம்

செல்வோம் விண்ணிலே நாமே

திறமையென்பதோ அது வளர்ந்துசெல்லுமே

காலம் மாறட்டும் (நம் மகளும் வளர்ந்துவிட்டாள்)

உன்னை போலவே

ஹே மரியானோ, ஏன் சோகம்?

என் உள்ளுள்ளே பல ஆசைகள்

எந்தனின் ஒரு கசின் தான்,

இவள் தான் டொலோரிஸ்

ok, நான் பாத்துக்கிறேன், good bye

உன் சத்தம் அதிகம், உங்க

அம்மாவை நீ நல்லா பாத்துப்ப

நீ தினமும் இரவில்

இந்த கவிதை எழுதி

தினம் காலை எழுந்து நீயும் coffee போடுவ

டொலோரிஸ், உன்னை காண்பேன்

நானும்தான், மாரியோ (yes)

(நீங்கள் தான், நீங்கள் தான்)

நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்

அவ்ளோ அவசரமா?

(நீங்கள் தான், நீங்கள் தான்)

வீடுதன்னையே அழகாய் புதுப்பிக்கவைத்தோம்

இது முன்போலில்லை

நம்மளும் தானே?

அது உண்மைதான்.

கொண்டாடலாம், ஆனால் அதன் முன்பு (என்ன?)

கைப்பிடி வேண்டும்

[இத நாங்க உனக்காக தயார்பண்ணோம்]

உன் திறமை நீ அறிவாய்

உன் துணிவை நாங்கள் அறிந்தோம்

இனி உன்னை நீ அறிவாய்

நீதான் நிஜ வரம் கண்ணே,

போவோம் நாம்.

கண்களை திற, என்ன பார்க்கிறாய்?

நான் கண்டேன் என்னை

முழுமையாகவே

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Encanto (OST)
  • country:United States
  • Languages:Portuguese, Chinese, Spanish, Japanese+30 more, Dutch, Korean, Italian, Malay, English, German, French, Russian, Thai, Norwegian, Polish, Indonesian, Tamil, Chinese (Cantonese), Kazakh, Georgian, Finnish, Croatian, Danish, Telugu, Swedish, Hungarian, Ukrainian, Icelandic, Hindi, Romanian, Vietnamese, Turkish, Bulgarian, Greek
  • Genre:Soundtrack, Latino
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Encanto_(film)
Encanto (OST)
Latest update
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved