வாடை சேரும் பேராழி
ஞாபகங்கள் ஆறாய் சிதறி
தூங்கப்போகும் செல்லம் யார்
விடைகள் ஏந்தும் ஆறை பார்
ஆறை பார்
விடைகள் ஏந்தும் ஆறை பார்
இந்த நீரில் நீ போனால்
தீர்வு காண பாதை உண்டாகும்
மூழ்கி உள்ளே திளைப்பாய்
நீ ஆழம் போனால் தொலைவாய்
அவள் பாடுவாள் நீ கேட்பாயா?
அங்கங்கே பார் அவள் மாயங்கள்
பயம் தோன்றினால் உடைப்பாயா?
அவளை நீ எதிர்கொள்வாயா?
நதியை நீ கடக்கும் முன்னாலே
கால் தரையின் மேல் பதியாதே
அதை நீ கொஞ்சம் கடந்தால்
அங்கே நீ கிடைப்பாயே
வாடை சேரும் பேராழி
அங்கு ஒரு அன்னை நினைவாய் உலவி
எல்லாம் தொலைந்து, போனாலும்
மீண்டும் வந்து உன் கை சேரும்
கை சேரும், உன் கை சேரும்