அகிலம் போற்றும் பாரதம்,
இது இணையில்லா மாகாவியம்!
தர்ம அதர்ம வழியினிலே,
நன்மை தீமைக்கு இடையினிலே,
விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமா?
சக்தியையும் பக்தியையும்,
ஜென்மத்தின் முக்தியையும்,
அகிலம் போற்றிடும் அற்புத காவியம்!
கிருஷ்ணரின் மகிமையும்,
கீதையின் பெருமையும்,
ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்,
மகாபாரதம்! மகாபாரதம்!