ஓ! டமடோவா வாழ்க்கை மின்னுகின்றதே!
ஒதுக்கப்பட்டிருந்தேன் நானே.
ஆனந்தமாக இனி வாழப்போறேனே
அழகாய் மாறிவிட்டேனே!
மனதில் பேச்சைக் கேட்க பாட்டி சொன்னாளா?
வென்றிடுவாய் நீ என்றாளா?
அழகு உருவத்தில் இல்லை யென்றாளே,
பொய் சொன்னாளே!
என் உடலோ-
மின்னும்! கடல் கொள்ளையர் புதையல் போலவே!
சுத்தம் செய்து ஜொலிஜொலித்து-
மின்னும்! யுவராணி அலங்காரமாகவே!
மின்னுமே! தெரியுமா?
மீன்கள் அறிவின்றியே மின்னும் எதையும்
துரத்தும்! விரட்டும், போ!
விரைந்து வருகின்றதே மின்னும் அழகினைக்
கண்டே!
ம்ம்ம்... மீன் உணவே-
இலவச விருந்தாக, நீயும் கடல் உணவாக!
...
மௌயி மாயாஜாலம் பலிக்கவில்லை!
நீயொன்றும் படைப்பவன் அல்ல!
போச்சு சாகசங்கள் தோத்துப் போச்சு!
ஒழிப்பேனே-
உன்னை!
முன்பைப்போல உந்தன் வலிமை இல்லை!
நானும் உனக்கென்றும் நன்றி சொல்லுவேன்!
உன் உடல் ஓவியம் போலே
எனது தேகம் எங்கும் மின்னச் செய்தேனே!
மறையவும்... இல்லை! தேகம்...
மின்னும்! குப்பை மேட்டில் ஒரு வைரம் போலவே!
மின்னுமே என் உடலோ
மின்னும்! என்னை அழிக்க உன் சக்தி போதாதே!
வலியவன்!
நீயுமே
கொஞ்சம் முயன்றிடுவாய் தோற்றுப் போகமாட்டேன்
உன்னிடம்! வணங்கு என்னிடம்! கேட்டுக்கோ!
உந்தன் உயிர் போகும்! கதை முடிந்திடும் நேரமே!
காலம் கூடுமே
தவறு செதாய், நீயும் ஒதுக்கப்பட்டாய்! அந்த
மனிதர்கள் அன்பைப் பெற மாட்டாய் மீண்டும்!
கள்வன் ஆனாயே! உன்னைக்
கைவிட்டது உன் திறமையே!
மௌயி!
உன் காலம் நாட்களை எண்ணும்!
என் உடலோ மின்னலாய்-
மின்னும்! கண்கள் இறுதியான காட்சியைக் காணும்!
இது தான் வாழ்வே! இனி-
மின்னும்! உயிர் போகும் முன் உன் ஆசை சொல்லுவாய்
என்னிடம்!
என் உடலோ உனை விட இன்னும்
மின்னலாய் ஒளி சிந்தியே
மின்னும்!